தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும், மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 7 மணி வரையிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.