தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 2023 அக்டோபரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் குடும்பத்திற்கு, 32 மாதங்கள் ஆகியும் மின்வாரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வறுமையில் வாடும் குடும்பத்தினர், உரிய இழப்பீடு கோரி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்று மின் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.