இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, தேன்சிட்டு மாடு, நடுக்குதிரை, கரிச்சான் குதிரை என 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு,
சுமார் ரூ. 4 லட்சம் மொத்தப் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையில் இருமருங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பந்தயக்கலா ரசிகர்கள் கண்டுகளித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.