பேராவூரணியில் வண்டிப் பந்தயம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, பொன்னாங்கண்ணிக்காட்டில் அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் சனிக்கிழமை மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை என 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும், சுழற்கோப்பை, சாரதி பரிசும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து ஏராளமான வண்டிகள் பங்கேற்றன. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பந்தயத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி