இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மன நலம் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவார்கள். இச்சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்களுடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுவரை தனித்துவமான அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி