தஞ்சாவூர்: நீண்ட காலமாக இல்லாத பள்ளிக் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊராட்சி பெத்தநாச்சிவயல் பகுதி, பின்தங்கிய குக்கிராமம் ஆகும். இப்பகுதி பெற்றோர்கள் போதிய கல்வி அறிவு பெறாத மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், தங்கள் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்து விட்டனர்.

 பெத்தநாச்சிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகாம்பிகை, ஆசிரியை நாகூர் மாலா ஆகியோர் கோரிக்கையின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் கலைவாணி வழிகாட்டுதலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, மருத்துவர் ஸ்ரீநிதி முன்னிலையில், 15 மாணவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் திங்கள்கிழமை பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது. ஊமத்த நாடு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் பெத்தநாச்சிவயல் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து 15 மாணவர்களுக்கான பிறப்பை ஆதாரங்களின் அடிப்படையில், பதிவு செய்து அதன் பிறகு பள்ளியில் வைத்து சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி