குருவிக்கரம்பை பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அவர் தனது பள்ளிப் பருவத்தில் பணக்காரர்கள் மட்டுமே மிதிவண்டிகள் வைத்திருந்ததை நினைவு கூர்ந்து, இன்றைய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைரவன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி