பேராவூரணி: தீ விபத்து குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சீனிவாசன், தீ விபத்துக்கான காரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள், தீயணைப்பு கருவிகள் பயன்பாடு, அவசர கால செயல்முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். தீயணைப்பு வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி