தஞ்சை: மனைவியுடன் தகராறு.. பேராவூரணியில் வாலிபர் தற்கொலை

பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் வெளிமடம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் (38) மதுப்பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து, பட்டுக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி