இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இதுகுறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில் பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஊழல் முறைகேடு தொடர்பாக நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று தஞ்சையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு வழக்கு தொடுத்த நீலகண்டன் என்பவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் பாலம், சாலை அமைக்கப்படாமல் பணிகள் நடந்ததாக, மோசடியாக பணம் எடுக்கப்பட்டதால், அந்த இடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் காரணமாக பேராவூரணி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.