தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் பூமிநாதன்-மலர்க்கொடி தம்பதியரின் கூரை வீடு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி மதன் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.