குருவிக்கரம்பையில் 10-ஆம் ஆண்டு தேசியளவிலான வாலிபால் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில், ஸ்ரீ குருநாதன் வசந்த விழாவை முன்னிட்டு 10-ஆம் ஆண்டு இந்திய அளவிலான வாலிபால் போட்டிகள் மே 27 முதல் மே 29 வரை மாலை 5 மணி முதல் மின்னொளியில் நடைபெறுகின்றன. இப்போட்டியில் சென்னை SDAT, SAI, கற்பகம் கல்லூரி, DG வைஷ்ணவா கல்லூரி உட்பட 6 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. விழா நிர்வாகிகள் K. R. கிருஷ்ணன், K. R. குகன், கரம்பக்காடு 'சாம்பியன்ஸ்' குழு மற்றும் சோழ நாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையினர் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். விளையாட்டு ரசிகர்களுக்குப் பொதுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி