கொன்றைக்காடு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று தனது தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளது. மாணவர் அ. ஹாஜா அர்சத் 489 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவி மு. அபூர்வா 486 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவர் ரா. திருச்செல்வம் 483 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்குப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சு. குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி