பட்டுக்கோட்டை: ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

பட்டுக்கோட்டையில், சதீஷ் (30) என்ற கூலித் தொழிலாளி நேற்று முன்தினம் தனது வீடு அருகே ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி ஆற்றில் விழுந்தார். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி