தஞ்சை: பெண் தற்கொலை முயற்சி காரணம் என்ன? காவல்துறை விசாரணை

திருவோணத்தை அடுத்துள்ள வத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி தனலட்சுமி (வயது 45). இவர் நேற்று (நவம்பர் 28) அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். 

இவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தனலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி