தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அறந்தாங்கி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று (நவ.24) இரவு பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்ட பிறகு, அவை ஸ்டார்ட் ஆகாததால் பெட்ரோல் பங்கிற்கு வந்து திரண்டனர். பாட்டிலில் பெட்ரோல் வாங்கியபோது தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தினார்.