வட்டாட்சியரகத்திற்கு கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய வயதானவர்கள் மற்றும் பொதுமக்களில் படிப்பறிவற்றவர்கள் தான் அதிகம். இவர்கள் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் எவ்வித பதாகைகளும் வைக்கப்படவில்லை. வட்டாட்சியரக நுழைவு வாயிலில் அனைவரும் பார்த்து படித்து தெரிந்துகொள்ளக்கூடிய துறை சார்ந்த பெயர் பதாகையும் வைக்கப்படவில்லை.
யாரிடம் கேட்டாலும் அதற்கு சரியான பதில் கிடைக்காமல் நாள் முழுவதும் காலை கடுக்க நின்று விட்டு செல்வதாகவும், பல மாதங்கள் வரை அலைய விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். உடனடியாக பூதலூர் வட்டாட்சியரகத்தில் துறை சார்ந்த பெயர் பதாகை வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.