உடனே, பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
மகளிர் காவலர்கள் சிறுமியிடம் விசாரித்த நிலையில், ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (35), கருப்பன் மகன் முகிலரசன் (40), இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை எனத் தெரியவந்தது.
இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜேஷ், முகிலரசன் இருவரையும் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.