பட்டுக்கோட்டையில் போதை பொருள் பதுக்கிய 3 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், முக்கூட்டுச்சாலை பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது, 136 கிலோ ஹான்ஸ் மற்றும் 46 கிலோ கூல் லிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மூட்டைகளாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த திருநாவுக்கரசு (63), அவரது மகன்கள் மகேந்திரன் (29), கார்த்திக் (34) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி