திருவிடைமருதூர் வட்டாட்சியர் மாற்றம்

தஞ்சையில் 17 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் தாசில்தார் பாக்கியராஜ் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை நகர நிலவரி திட்ட தனித் தாசில்தார் சுப்பிரமணியன் பேராவூரணி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தர்மேந்திரா பட்டுக்கோட்டை தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார் பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். பேராவூரணி தாசில்தார் தெய்வானை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி