தஞ்சாவூர்: விஜய் கூட்டம்; போலி QR கோடுடன் வந்த நபரால் சலசலப்பு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று (மார்ச் 3) நடைபெற்ற விஜய் நிர்வாகிகள் சந்திப்பில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டை கொண்டு வந்த 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. போலி QR Code அட்டையுடன் வந்த ஒருவரை போலீசார் கண்டறிந்து, மாவட்டச் செயலாளரின் சீல் இல்லாததால் அது போலி என உறுதி செய்து, அவரை எச்சரித்து அனுப்பினர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு வருகிறார்.

தொடர்புடைய செய்தி