அதனை சுற்றி குப்பைகள் தேங்கி இருப்பதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என செய்தி வெளியிட்டோம், அதேபோல் அப்பகுதி மக்கள் கோரிக்கையின் பேரில் கிராமசபையில் தீர்மானமும் இயற்றினர். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்பகுதியில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது.
நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் இருந்த குப்பைகளை அகற்றிய அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இதில் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் மாசிலாமணி, நூருல் ஹமீது ஆகியோர் அதிகாரிகளுடன் இருந்தனர்.