பட்டுக்கோட்டை அருகே கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முசிறி கிராமத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயிலில், சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அரங்கேறியது. இந்த ஆன்மீக விழாவில் முசிறி மற்றும் சுற்றியுள்ள 36 கிராமங்களைச் சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி