பட்டுக்கோட்டை அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ச. சன்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் சார்பில், தாமரங்கோட்டை வடக்கு, பள்ளிகொண்டான், மழவேனிற்காடு, கொண்டிகுளம், ஏனாதி ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ச. மாலதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்துக்களை எடுத்துக் கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் இலை வண்ண அட்டை கொண்டும், நெல் சாகுபடி குறித்து துண்டு பிரசுரங்களை கொண்டும், நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளிடம் தெளிவாக எடுத்துக் கூறினர். பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ச. சன்மதி மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி