இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி (30), குமார் (32), ராஜா (53) ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். நேற்று (நவம்பர் 17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தனர். இலங்கை அரசுக்கு மீனவர் வாரியத் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி