மதுக்கூர் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட ஷமீனா பர்வீன் (21) என்ற இளம்பெண், பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மகன் காதல் திருமணம் செய்ததில் அதிருப்தி அடைந்த மாமியார் ரஹ்மத்து நிஷா, வீட்டு வேலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தண்ணீர் பிளாஸ்க்கால் தாக்கி ஷமீனாவைக் கொன்றுள்ளார். கொலையை மறைக்க நாடகமாடிய மாமியாரை மதுக்கூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.