இக்கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு, தங்களது முக்கிய விவசாயப் பிரச்சனைகளை முன்வைத்துப் பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை, மின்சாரம், நகராட்சி, பொறியியல், வட்டார வளர்ச்சி, நீர்வளம், நிலம், சாலை மற்றும் பிற துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்வுகளை வழங்கினர். மாணவர்கள், விவசாயிகளும், அரசு அலுவலர்களும் நேரடியாகக் குறைகளை விசாரணை செய்த விதத்தைக் கவனித்து, அரசாங்கத்தின் நிர்வாக செயல்முறைகள் மற்றும் விவசாயப் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து பயனுள்ள அனுபவங்களைப் பெற்றனர். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பங்கேற்ற அனைத்து அலுவலர்களுக்கும் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி