ஒரத்தநாடு அருகே குலமங்கலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது, விஜயந்திரன் என்பவர் தனது உறவினர் கலையரசனை கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலையரசன், தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.