திருவையாறு வட்டம் கண்டியூர் கலியாணபுரம், பொன்னாவரை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், கும்பகோணம் அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் சுமார் 30 ஏக்கர்கள் செங்கரும்பு சாகுபடி செய்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
எனவே கூட்டுறவு துறை மூலம் தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக குழு அமைத்து செங்கரும்புகள் சாகுபடி செய்து உள்ள விவசாயிகளிடம் நேரடியாக பேசி கூடுதல் விலைக்கு செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து கரும்புகளை வாங்காமல் நமது மாவட்டத்தில் விளையும் செங்கரும்புகளை நேரடியாக அரசு கொள்முதல் செய்து அனைத்து நியாய விலை ரேஷன் கடைகளிலும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.