பேராவூரணியில் அங்காடிகள், பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மனவயல், பூவாளூர் கிழக்கு, அம்மையாண்டி, இரண்டாம்புளிக்காடு, புதிரிவயல், மேற்குடிக்காடு ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகள், பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, கூப்புளிக்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் நிழற்குடை ஆகியவற்றை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் ஆகியோர் சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியக்கழக செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி