திருநாராயணபுரம் சாலையில் புதைசாக்கடை கழிவுநீா்

கும்பகோணம் 22-ஆவது வார்டு திருநாராயணபுரம் பகுதியில் புதைசாக்கடை கழிவுநீர் தொட்டிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள நான்கில் மூன்று புதைசாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி