தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் வி. எஸ். பரீட்சித், கோவாவில் நடைபெற்ற 8-ஆவது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உத்தரகாண்டில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியிலும் தங்கம் வென்ற இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தச் சாதனையைப் பாராட்டி பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.