அதிராம்பட்டினத்திலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் உள்ள மகிழங்கோட்டை பிரிவு சாலையில், மீன், கோழி மற்றும் மருத்துவக் கழிவுகள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடு, நாய்கள் மற்றும் பறவைகள் இந்தக் கழிவுகளை உண்பதற்காக வருவதோடு, சாலைகளிலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கொட்டிச் செல்கின்றன. எனவே, இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கழிவுகளை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.