உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் மாவட்ட அவை தலைவர் சுப. சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், வரும் 15ஆம் தேதி பட்டுக்கோட்டையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் திருமண விழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், முன்னாள் எம்எல்ஏ, எம்பி, மொழிப்போர் தளபதி எல். கணேசனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகரக் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட, சார்பணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி