நம்பிவயல் ஊராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், நம்பிவயல் கிராமத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் புதிய கிளை துவக்கப்பட்டது. வி. தொ. ச மாவட்டச் செயலாளர் ஆர். வாசு கொடியேற்றினார்.

துவக்க நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர்  எஸ். கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ரெ. ஞானசூரியன்,   சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை, சிபிஎம் கிளைச் செயலாளர் மெரினா ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ் செல்வன், ஒன்றியச் செயலாளர் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.  

புதிய கிளையின் தலைவராக ஆர். மூக்கையன், செயலாளராக டி. சிவகாமி சுந்தரி, பொருளாளராக ஆர். பாலமுருகன், துணைத்தலைவராக எஸ். சிவலிங்கம்,   துணைச் செயலாளராக எஸ். திருமலர் செல்வி ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், "நம்பிவயல் வடக்கு ஊராட்சியில் உள்ள, சாலை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றி, சாலையை சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி