வாய்க்காலில் வரும் தண்ணீர் சிறிய மதகுகளின் வாயிலாக குளங்களுக்கும், ஏரிகளுக்கும் சென்று நிரம்புகிறது. ஆனால் தற்போது செடி, கொடிகள் முளைத்து கழிவுநீர் கலந்து குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், அனைத்தும் கல்யாண ஓடை வாய்க்காலில் கிடப்பதால் மேட்டூர் அணை திறந்தாலும் ஒரு வாரகாலத்திற்குள் அந்த தண்ணீர் கல்யாண ஓடை வாய்க்காலில் வந்து வயல்களுக்கு பாயுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மதுக்கூர் கல்யாண ஓடை கிளை வாய்க்காலை சுத்தப்படுத்தி தண்ணீர் ஓடுவதற்கான பாதையை சரிசெய்து தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?