ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய கோரிக்கை

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும், வியாபாரிகள் லாபக்காய் எடுப்பதை தவிர்க்க அரசே கிலோ கணக்கில் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும், தஞ்சை மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழில்களை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும், பேராவூரணியில் கொப்பரை கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும், தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும், தென்னைக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், தென்னையை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும், சென்னை விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை டிச. 18ஆம் தேதி பேராவூரணியில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி