இது குறித்து தஞ்சாவூர் 'சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக' நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணத்திலுள்ள 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் ஸ்ரீனிவாச ராமானுஜன் சர்வதேச மாநாடு டிசம்பர் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் அலெக்ஸாண்டர் டண்ணுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 'சாஸ்த்ரா' ராமானுஜன் விருது டிசம்பர் 22-ஆம் தேதி வழங்கப்பட்டது.
இப்பரிசுத் தொகையை 'சாஸ்த்ரா' பல்கலைக்கழகத்துக்கே அலெக்ஸாண்டர் டண் நன்கொடையாக வழங்கினார். இந்த நிதியை இளம் கணித ஆராய்ச்சியாளர்களின் கல்வித் தேடலில் சிறந்துவிளங்குவதற்கு ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். விருது குழு தலைவர் கிருஷ்ணசுவாமி அல்லாடி பல்கலைக்கழகம் முதன்மை ஸ்வாமிநாதன் ஆகியோர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.