ரைஸ் மில்லால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நெல் அரவை மில்லில் இருந்து வெளியேறும் தூசி காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பட்டுக்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி