இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பேசுகையில், விசைத்தெளிப்பான் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக தங்கள் வேளாண் உதவி அலுவலர்களை அணுகி ஆதார் மற்றும் நில உரிமை ஆவணங்களின் நகல்களை வழங்கி மதுக்கூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து வாட்டாகுடி உக்கடை பஞ்சாயத்தில் 6 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வாட்டாகுடி உக்கடை ஊராட்சி மன்ற தலைவர், வேளாண் உதவி இயக்குனர், வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஆகியோர் வழங்கினர்.