அதிராம்பட்டினம் பகுதியில் 25-ஆம் தேதி மின் நிறுத்தம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளுர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை முதல்சேரி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி