பட்டுக்கோட்டை: கந்துவட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டையில் லேத் கடை உரிமையாளர் சரவணன் (28), வாங்கிய 2 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி கேட்டு சத்தியராஜ், ஐயப்பன் ஆகியோர் மிரட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி