பட்டுக்கோட்டை: நுண்ணீர் பாசனத்திற்காக மானியம் ஒதுக்கீடு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில் 2026-27 நிதியாண்டில் 60 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த ₹33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்கச் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவும் இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி