பட்டுக்கோட்டை அருகே உள்ள கோட்டாகுடி காட்டாற்றில் அரசு அனுமதியின்றி சவுடு மண் என்ற பெயரில் தூய ஆற்று மணலை கடத்துவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மற்றும் மாட்டுவண்டி உரிமையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டாற்றுக்குள் கனரக வாகனங்களை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 லாரிகளில் மணலை ஏற்றிச்செல்வதாகவும், இதை தடுப்பதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டாகுடியில் மணல் அள்ளும் இடத்தில் ஒன்றுதிரண்டு பொதுமக்கள் திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.