பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரூ. 10 கோடியில் புதிய கட்டடம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன் கூடிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடத்தில் மகப்பேறு நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, தீவிர கண்காணிப்பு பிரிவு, புதிதாக பிறந்த குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கட்டடத்திற்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி