பட்டுக்கோட்டை: மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்ற மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமில், முதற்கட்டமாக 10 மீனவ மகளிருக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விண்ணப்பித்திருந்த 1832 பேரில் எஞ்சியோருக்கும் மார்ச் முதல் வாரத்திற்குள் அட்டைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட மீனவ கிராம மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். நாகை மண்டல இணை இயக்குநர் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி