இதில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விடுதியில் உள்ள 30 மாணவிகள் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கு சென்ற நிலையில், அவர்களில் 6 பேருக்கு காலை 11 மணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவிகளை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், மீதமுள்ள 22 மாணவிகளுக்கும் அடுத்தடுத்து வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அந்த மாணவிகளைப் பரிசோதித்ததில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்தது. தகவலறிந்த கோட்டாட்சியர் சங்கர், வட்டாட்சியர் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறி, நலம் விசாரித்தனர்.
மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.