ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே, மகளிர் காவல் நிலையத்திற்கு அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுப்பிரியர்களின் கேலி கிண்டல்களால் பெண்கள், மாணவர்கள் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.