தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா பூவாணம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் முனைவர் டி. சகாயராஜ் ஆலயத்தை புனிதம் செய்து திறந்து வைத்தார். புனல்வாசல் பங்குத்தந்தை முனைவர் எஸ். ஜான்சன் எட்வர்ட், உதவி தந்தை ஏ. பிரவீன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மற்றும் பூவாணம் பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் பங்கேற்றார். தொடர்ந்து 5000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.