மதுக்கூர் அருகே காடந்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் கிராம கோயில் இந்த கோயிலில் காமாட்சி அம்மன், துாண்டி வீரன், முனீஸ்வரன் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந் நிலையில் மதுக்கூர் அருகே விக்ரமம் கிராமம் பாரதி நகரை சேர்ந்த கோயில் நிர்வாகி பெரியசாமி கோயிலுக்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்களால் முனீஸ்வரன் கை உடைக்கப்பட்டுள்ளது. துாண்டி வீரன் சிலையில் தலை தனியாக உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி பெரியசாமி மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.